Tuesday 25 July 2023

மாவீரன் படம் விமர்சனம்

"வீரமே ஜெயம்" படம் பார்த்தவர்களுக்கு இந்த வாசகம் புள்ளரிப்பை ஏற்படுத்தும். ஆம் சிவகார்த்திகேயன் படங்களில் இப்படம் சற்று மாறுபட்டது. வழக்கமான கிண்டல் கேலி அல்லாது தன் நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன். சரி இப்பொழுது கதைக்கு வருவோம். சென்னை கூவம் நதி ஓரத்தில் தன் அம்மா மற்றும் தங்கையுடன் குடிசை வாசியாக வசித்து வருகிறார் நாயகன் கார்ட்டூனிஸ்ட் சத்யா. அரசாங்கத்தின் கட்டாயத்தால் அப்பகுதி மக்கள் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பிற்கு மாறுகிறார்கள். யார் வம்பிர்க்கும் செல்ல கூடாது, நாம உண்டு நம்ம வேலையுண்டு என்று பயந்தே வாழும் சத்யாவிற்க்கு அங்கு சென்ற பின் தான் தெரிகிறது அந்த அடுக்கு மாடி குடியிருப்பு தரம் இல்லாமல் கட்டபட்டு உள்ளது என்று அதையும் அட்ஜஸ்ட் செய்து வாழ்கிறார். நாள் செல்ல செல்ல அந்த வீடால் சத்யாவிற்க்கு துன்பம் நேர ஒரு கட்டத்தில் தன் உயிரை மாய்க்க முடிவு செய்து முயற்சி செய்கிறார் ஆனால் அதுவோ தோல்வியில் முடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்புகிறார். அவர் தற்கொலை முயற்சியின் விளைவால் அவருக்கு மட்டுமே ஒரு குரல் கேட்கிறது. அந்த குரல் தான் வரைந்த கதையில் வரும் நாயகனின் குரல், ஒரு வீரனின் குரல், கோழையான சத்யா அந்த வீரனின் குரலை கேட்டு செயல்படுகிறார் அதனால் சத்யாவிர்க்கும் அந்த தரமில்லாத வீடு கட்டிக்கொடுத்த அமைச்சர் ஜெயகொடிக்கும் பகையாகிறது. பிறகு அந்த எமனான ஜெயக்கொடியை வென்று மக்களை காப்பாற்றி மாவீரன் ஆனரா என்பதே மீதிக்கதை. சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் சொன்னது போலவே இப்படத்தில் மாருபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்பாவியான முகம், பயந்த சுபாவம் போன்ற பாவனைகளால் நம்மை ரசிக்க வைக்கிறார். கங்கிராட்ஸ் சிவா!! அவ்வப்போது வந்து போகும் நடிகை அதிதி தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் அந்த குரல், அதன் பிறகு யோகிபாபு பல நாட்கள் கழித்து தியேட்டரில் விசில் பறக்கிறது. தான் வரும் காட்சிகள் அனைத்திலும் பார்ப்பவரை சிரிக்க வைத்து விடுகிறார். அமைச்சர் ஜெயக்கொடியாக வரும் மிஷ்கின் தன் நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். அம்மாவாக வரும் சரிதாவும் ரசிக்க வைக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் அந்த குரல், விஜய் சேதபதியின் குரல். விஜய் சேதுபதியின் குரலால் நாயகன் படும் பாடு எக்கச்சக்கம். தியேட்டரில் கைதட்டல் வாங்குகிறார்கள் இருவரும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதற்கு பெரிய மனது வேண்டும், அந்த வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் குரல் கொடுத்த விஜய் சேதுபதியும் உயரத்தில் நிற்கிறார்கள். இருவருக்கும் இருக்கும் ஈகோ இல்லாத நட்பு தொடரட்டும் என வேண்டிக்கொள்கிறேன். ஆக மொத்தம் மாவீரன் வென்றான். கட்டாயமாக தியேட்டரில் பார்க்கலாம்.